இயக்குனர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

vaanamkottatum radhika

சித் ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. ப்ரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதமாக அமைந்துள்ளது. 

sarathkumar sarathkumar

தற்போது படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. சிறைவாசத்தில் தவிக்கும் சரத்குமார் தன் மனைவி ராதிகா எழுதிய கடித்தத்தை படிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.