வானம் கொட்டட்டும் என் உயிர் காற்றே பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | January 20, 2020 17:02 PM IST

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக வானம் கொட்டட்டும் என்ற படத்தை தற்போது தயாரித்துள்ளார். இந்த படத்தை தனா இயக்கியுள்ளார்.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்திலிருந்து ஈஸி கம் ஈஸி கோ மற்றும் கண்ணு தங்கம் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் விநியோக பங்குதாரராக Yநாட்X நிறுவனம் இணைந்துள்ளனர்.
படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. தற்போது படத்திலிருந்து என் உயிர் காற்றே லிரிக் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை சிவா ஆனந்த் எழுதியுள்ளார்.