தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

இவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் உள்ளிட்ட 5 விருதுகளை அள்ளியுள்ளது.இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.இவர் அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

வாடிவாசல் படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.வெற்றிமாறன் இயக்க ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த [படம் உருவாகவுள்ளது.படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா,ஜீ வி பிரகாஷ்,வெற்றிமாறன் என 3 தேசிய விருது பிரபலங்கள் இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது.இன்று படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு டெஸ்ட் ஷூட் நடைபெற்ற வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.டெஸ்ட் ஷூட் வீடியோவே இவ்ளோ மாஸா இருக்கே படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.