திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை தாண்டி ரசிகர்கள் மத்தியில் மியூசிக் ஆல்பம்கள் தனி இடம் பிடித்திருக்கும்.அதிகரித்து வரும் இசைஆர்வலர்களை தொடர்ந்து சமீபகாலமாக மியூசிக் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

குட்டி பட்டாஸ்,அஸ்கு மாறோ,என்ஜாய் எஞ்சாமி என பல பெரிய ஹிட் மியூசிக் ஆல்பங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து சில பல மியூசிக் ஆல்பங்கள் சூப்பராக ரெடி ஆகி வருகின்றன.இந்த வரிசையில் விரைவில் வெளியாகவுள்ள மியூசிக் ஆல்பம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

100 மில்லியனை தாண்டிய குட்டி பட்டாஸ் குழுவினருடன், நடிகர் கருணாஸின் மகனும் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான கென் கருணாஸ் நடித்து , கென் மற்றும் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளனர்.சாண்டி நடனமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை வெங்கி இயக்கியுள்ளார்.வாடா ராசா என்று இந்த பாடலுக்கு பெயரிட்டுள்ளனர்.

இந்த பாடலில் கென் கருணாஸுடன் இணைந்து அவரது அம்மா கிரேஸ் நடித்துள்ளார்.இவர்களுடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரில் பிரபலமான நடிகை ப்ரீத்தி சர்மா நடித்துள்ளார்.இந்த ஆல்பம் பாடல் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.