விஜய்சேதுபதியின் Uppena படத்தின் சூப்பரான ட்ரைலர் இதோ !
By Aravind Selvam | Galatta | February 04, 2021 22:36 PM IST

இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.
சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.சமீபத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej.இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.ஆக்ஷன் மற்றும் காதல் என colorfull ஆக இந்த படம் உருவாகி வருகிறது.மீனவர்கள் சமுதாயத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.விறுவிறுப்பான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Cooku with Comali's Pavithra Lakshmi in Bigg Boss Kavin's new project
04/02/2021 09:19 PM
Jiiva - Arulnithi's Kalathil Sandhippom gets a wide and massive release!
04/02/2021 07:29 PM