பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தை இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது திரை ரசிகர்கள் அறிந்தவையே.

dhanushraasineyargalae

ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடியாக உருவாகிறது. ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகி வருகிறது. ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

harishkalyan

harishkalyan

தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த சிறப்பு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.