ரம் படத்திற்கு பிறகு ரிஷிகேஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் உணர்வுகள் தொடர்கதை. பாலு சர்மா இந்த படத்தை இயக்குகிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரிஷிகேஷ் ஜோடியாக செர்லின் சேத் நடிக்கிறார். ஸ்ரீரஞ்சனி, அஜய் டைடஸ், ஆடம்ஸ் நடித்துள்ளனர். வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருப்பார் ரிஷிகேஷ். 

பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஷெர்லின் செத். இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். சுந்தர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பணிக்கு செல்லும் கணவன், மனைவிக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாகி வருகிறது இப்படம். இதில் நடிப்பதற்காக ஷெர்லின் செத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று சுவையூட்டும் தகவலும் நம் செவிகளுக்கு எட்டியது. 

தற்போது இந்த படத்திலிருந்து கோப காணல்கள் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. தனுஷ் இந்த பாடலை வெளியிட்டார். அமின் மிர்சா இசையமைத்த இந்த பாடலை கெளதம் பரத்வாஜ் பாடியுள்ளார். சோனி நிறுவனம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைபற்றியுள்ளது.

இளம் ஹீரோக்களை ஊக்குவிக்கும் நம்ம ஊரு ரசிகர்கள். நிச்சயம் ரிஷிகேஷின் நடிப்பையும் வரவேற்பார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். VIP படத்தில் அப்பாவியாக நடித்த இவரா இப்படி ரொமான்ஸில் பட்டையை கிளப்புகிறார் என்றும் விளையாட்டாக பதிவு செய்து வருகின்றனர்.