ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் மலையாள சினிமாவை நோக்கி படையெடுக்க வைத்தது என்றால் அது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த பிரேமம் திரைப்படம் தான்.  பிரேமம் திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன் சாய்பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
 
அழகிய காதல் திரைப்படமாக வெளிவந்த பிரேமம் திரைப்படம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இத்திரைப்படத்திற்கு ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றிபெற்ற பிரேமம் திரைப்படத்தை தெலுங்கில் நடிகர் நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்க ரீமேக் ஆனது.
  
இந்நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனிடம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் எழுப்பிய கேள்விக்கு தற்போது கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். “மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் சினிமா எடுப்பதில் பட்டப்படிப்பு என்றால் தசாவதாரம் பிஎச்டி பட்டம் பெறுவதற்கு சமமானது. இவற்றை நீங்கள் எவ்வாறு படமாக்கினார்கள் என்பதைப் பற்றி எங்களுக்காக சொல்ல முடியுமா?” என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, “நன்றி அல்போன்ஸ் புத்திரன் கட்டாயம் சொல்கிறேன் உங்களுக்கு இது எவ்வளவு கற்றுக் கொடுத்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் இதை முதுகலை பட்டமாகத் தான் பதிவு செய்தேன். ஆண்டுகள் கழித்தும் இது பற்றி பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது” என பதிலளித்துள்ளார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கேள்விக்கு உலகநாயகன் பதில் அளித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ulaga nayagan kamalhassan answers director editor alphonse puthran goes viral