தமிழ் திரை உலகின் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படும் நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வருகிறார். இதனிடையே தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளாக வரும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டும் வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார் உதயநிதி. மேலும் வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கலகத் தலைவன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் அதிரடியான ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் கலையரசன் மற்றும் பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்திற்கு K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரலி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கவனத்தை ஈர்க்கும் அந்த டீசர் இதோ…