நடிகர்,பாடலாராசிரியர்,பாடகர்,இயக்குனர் என பல துறைகளில் தனது பாணியில் அசத்தியுள்ளவர் அருண்ராஜா காமராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார் அருண்ராஜா காமராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் செம ஹிட் அடித்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கை தொடங்கினார் அருண்ராஜா காமராஜ்.இந்த படத்தினை போனி கபூர்,ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நெஞ்சுக்கு நீதி என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார்.தான்யா ரவிச்சந்திரன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆரி,ஷிவானி ராஜசேகர்,சுரேஷ் சக்ரவர்த்தி,இளவரசு,மயில்சாமி,ராட்சசன் சரவணன் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் மே 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படம் சோனி லைவ் தளத்தில் வரும் ஜூன் 23 முதல் ஸ்ட்ரீம் ஆகும் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தினை திரையரங்குகளில் மிஸ் செய்த ரசிகர்கள் இந்த தளத்தில் கண்டு மகிழலாம்