கருணாநிதி வாழ்க்கை வரலாற்று படம் ? உதயநிதி ஸ்டாலின் விளக்கம் !
By Aravind Selvam | Galatta | January 05, 2020 17:59 PM IST

கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனை தவிர கண்ணை நம்பாதே மற்றும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.திமுகவின் மாநில இளைஞர் அணி தலைவராகவும் ஜூலை முதல் செயல்பட்டு வருகிறார்.கட்சி பொதுக்கூட்டங்களிலும்,பிரச்சா
தற்போது இவர் முன்னாள் முதல்வரும் இவரது தாத்தாவுமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதற்கு விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின் இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.