தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் & இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார் அருண்ராஜா காமராஜ். நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அருண்ராஜா காமராஜ் தனது புதிய பயணத்தைத் தொடங்கினார்.

கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அருண்ராஜா காமராஜ் அடுத்த புதிய திரைப்படத்தை தொடங்கினார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதிஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஷக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஆர்டிகல் 15 ரீமேக் திரைப்படத்திற்கு கனா படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். கனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் மற்றும் திபு நினன் தாமஸ் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் பதிவு இன்று நடைபெற்றுள்ளது இதுகுறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

மிகவும் முக்கியமான ஒரு பாடல் , அதன் குரல் பதிவின் முதல் நாள் … நெகிழ்ச்சிக்கு அளவில்லை. அண்ணன் யுக பாரதி அவர்களின் வரிகளின் ஆழம் நண்பன் திபு நினன் தாமஸ்-ன் ஆழமான இசை , உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமாகும் நேரத்தில் இப்பாடல் பதிவு மாபெரும் உத்வேகத்தை அளிக்கிறது.

என தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.