ட்விட்டர் அதிகம் பயனாளர்களை கொண்ட சமூகவலைத்தளங்களில் ஒன்று.ஒவ்வொரு வருடமும் ட்விட்டரில் பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை வருட கடைசியில் வெளியிட்டு வருகின்றனர்.அதே போல் இந்த வருடமும் எல்லா துறையிலும் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Twitter This Happened 2019 Vijay Bigil Atlee ARR

சினிமா துறையில் கடந்த வருடங்களை போல ஹிந்தி நட்சத்திரங்களுடன் தமிழ்,தெலுங்கு நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர்.இதில் இந்திய அளவில் பிரபலமான ஹாஷ்டேக்களில் பிகில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
 

அதிகம் பேசப்பட்ட நட்சத்திரங்களில் விஜய் இந்திய அளவில் 5ஆவது இடத்தையும்,ஏ.ஆர்.ரஹ்மான் 6ஆவது இடத்தையும்,அட்லீ 10ஆவது இடத்தையும் பிடித்திருந்தனர்.பெண்களுக்கான பட்டியலில் அர்ச்சனா கல்பாத்தி 4ஆவது இடத்தையும்,காஜல் அகர்வால்,ரகுல் ப்ரீத் 7 மற்றும் 10ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.மேலும் விஜய் பிகில் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக பதிவிட்ட ட்வீட் தான் அதிகமுறை மறுட்வீட் செய்யப்பட்டது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.