தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹய்தாரி நாயகியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்குகிறார். இயக்குனரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

thuklakdarbar

படப்பிடிப்பு துவங்கும் முன்பே விஜய் சேதுபதி படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியது. 96 புகழ் பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் ஜனவரி 16-ம் தேதி விஜய்சேதுபதியின் பிறந்தநாள் என்பதால், துக்ளக் தர்பார் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். 

vijaysethupathi

விஜய் சேதுபதி கைவசம் லாபம், க.பெ. ரணசிங்கம், கடைசி விவசாயி போன்ற படங்கள் உள்ளது. அத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திலும் நடிக்கிறார்.