டிரம்ப் தன் மீது காதல் கொண்டிருப்பதாக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல் அடித்துள்ளது வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ஹாலிவுட் நடிகரான அர்னால்டும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள். தற்போது டிரம் அதிபராக இருந்து வரும் நிலையில், நடிகர் அர்னால்டு கடந்த 2003 முதல் 2011 ஆம் ஆண்டு வரை, கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.

 Trump in love Arnold

இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. குறிப்பாக, டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்டு கடுமையாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்குத் தொடர்ந்து கிண்டலாகப் பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அர்னால்டை சந்தித்த செய்தியாளர்கள், டிரம்பின் கருத்து வேறுபாடு மற்றும் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டனர்.

https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/general-images/1568271255donald-trump-is-in-love-with-me-arnold-schwarzenegger.jpg

அதற்குப் பதில் அளித்துப் பேசிய அர்னால்டு, “டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். அவர் என்னைப் போல் இருக்க விரும்புகிறார். என்று கிண்டலாகப் பதில் அளித்தார். தற்போது, டிரம் - அர்னால்டு தொடர்பான பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.