தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் த்ரிஷா. அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 

trisha

த்ரிஷாவின் 60-வது படம் என்பது கூடுதல் தகவல். பொலிடிக்கல் திரில்லராக உருவாகியுள்ளது இத்திரைப்படம். அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்திற்கு கூடுதல் வலு. த்ரிஷாவுடன் ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

trisha trisha

தற்போது இந்த படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவுள்ளது என்ற தகவல் தெரியவந்தது. ராங்கி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களும் த்ரிஷா கைவசம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.