பொன்னியின் செல்வன் படம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர் ! த்ரிஷாவின் பதில் இதோ
By Sakthi Priyan | Galatta | May 14, 2020 13:43 PM IST

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் சரத்குமார், ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது என்று தெரிகிறது.
இந்நிலையில் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் த்ரிஷாவிடம் ரசிகர் ஒருவர், படம் பற்றிய கேள்வியை முன்வைத்தார். படத்தில் உங்கள் பாத்திரம் என்ன என்று அவர் கேட்டிருந்தார். இதற்கு மௌனமான இமோஜியை கொண்டு பதிலளித்துள்ளார் த்ரிஷா. குந்தவை ரோலில் த்ரிஷா நடிப்பதாக செய்திகள் கசிந்தது. படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.