தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா.லேசா லேசா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.இதனை தொடர்ந்து சாமி,கில்லி என ஹிட் படங்களில் நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து அசத்தினார் த்ரிஷா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் த்ரிஷா.இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.முன்னணி ஹீரோக்கள் தொடங்கி தற்போதுள்ள பல ட்ரெண்டிங் இளம் நாயகர்களுடன் நடித்து விட்டார் த்ரிஷா.

அடுத்ததாக இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன்,ராம் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.இவற்றை தவிர ஒரு தெலுங்கு வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார் த்ரிஷா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

உலகமெங்கும் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது.சாதாரண மக்களை தாண்டி பல பிரபலங்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நடிகை த்ரிஷா,கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வேண்டி வருகின்றனர்.