உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக திரைப்பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

trisha

அந்த வீடியோவில், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். தனிமைப்படுத்த சொல்வதால் உங்களை அவமானப்படுத்துவதோ, டார்ச்சர் செய்வதோ அல்ல. நமது பாதுகாப்பிற்காக தான் அரசு இந்த நடவடிக்கையை எடுக்கிறது என்று எடுத்துரைத்தார். 

Trisha

டிக்-டாக் வீடியோ மட்டுமல்லாமல் இதுபோன்ற விழிப்புணர்வு செய்வதால் நடிகை த்ரிஷாவை பாராட்டி வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து த்ரிஷா கைவசம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.