திருமணம் குறித்து மனம் திறந்த த்ரிஷா !
By Aravind Selvam | Galatta | January 20, 2020 16:49 PM IST

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா.தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.இதனை தவிர ராங்கி,கர்ஜனை,பரமபத விளையாட்டு உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்திலும்,தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலும் ஹீரோயினாகவும் நடித்துவருகிறார்.நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய த்ரிஷா சில முக்கிய கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
உங்கள் வாழ்க்கையில் செய்யவிரும்பும் சாகசாமான நிகழ்வு எது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதிலளித்த த்ரிஷா தனது திருமணத்தை லாஸ் வேகாஸில் நடத்தவேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.