சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று முடிவெடுத்த இவர் , தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் இவரது காதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து வைபவ் ஜோடியாக இவர் நடித்த லாக்கப் படம் OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.இந்த படத்திற்கு தாழ்திறவா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த அறிவிப்புகளை கடந்த மாதம் வெளியிட்டது.இந்த வரிசையில் முதலாவதாக நயன்தாரா மற்றும் RJ பாலாஜி நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சில தொடர்களின் டீசரையும் ஹாட்ஸ்டார் வெளியிட்டிருந்தனர்.

அதில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி ட்ரிபிள்ஸ் தொடரும் ஒன்று.இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செம ரகளையான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடர் டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.