நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ள புதிய திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்க தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்பர்ன் எனும் சர்வதேச விருது விழாவில் ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ்க்காக நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் காத்துவாக்குல ரெண்டு காதல்  படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவிற்கு கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S (@samantharuthprabhuoffl)