தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகரான ஜித்தன் ரமேஷ் தமிழில் ஜித்தன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் திரை உலகின் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி அவர்களின் மகனான ஜித்தன் ரமேஷ் தொடர்ந்து  ஜெர்ரி, மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஓஸ்தி  உள்ளிட்ட  தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் சினிமா மட்டுமல்லாது டே நைட் கேம் என்ற மலையாளத் திரைப்படத்திலும் ஒக்கட்டே லைப் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வரும் நடிகர் ஜித்தன் ரமேஷ் தற்போது சின்னத் திரையிலும் கால் பதித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். தனக்கே உரித்தான ஸ்டைலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி ரசிகர்களை கவர்ந்த ஜித்தன் ரமேஷ் தற்போது விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் ஜோடிகள் எனும் புதிய நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். 

நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக பங்குபெறும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தமிழ் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது. 

இன்று வெளியான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ வீடியோவில் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடனத்தின் போது சொதப்பிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ட்ரெண்டிங் ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.