பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

darbar

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. 

darbar

இந்த படத்தின் முதல் பாடலான சும்மா கிழி சமீபத்தில் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. தற்போது படத்தில் திருநங்கைகள் மூன்று பேர் ஒரு பாடல் பாடியுள்ளனர் என்ற செய்தி வெளியானது. இதுபோன்ற செயல்கள் ஆரோக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் போற்றி வருகின்றனர்.