தமிழில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த டெவினோ தாமஸ், மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக வெளிவருகிறது மின்னல் முரளி திரைப்படம்.

இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கத்தில் மின்னல் முரளி படத்தில் மின்னல் முரளி எனும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  டொவினோ தாமஸ். மேலும் நடிகர்கள் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் ஷான் ரஹ்மான் மற்றும் சுஷில் ஷ்யாம் இணைந்து இசையமைத்துள்ளனர்.

வீக் என்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிற டிசம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மின்னல் முரளி திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக “தீ மின்னல்” எனும் பாடல் இன்று வெளியானது. அதிரடியான தீ மின்னல் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.