மலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.

Tovino Thomas Playing With Her Daughter In Gym

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல், விளையாட்டு, பழைய புகைப்படங்களை பகிர்வது என அசத்தி வருகின்றனர். 

Tovino Thomas Playing With Her Daughter In Gym

இந்நிலையில் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்யும் இடத்தில் அவரது மகள் ஊஞ்சல் ஆடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ஊரடங்கு அவள் கதவுளை மூடிவிட்டதால், இதோ என் ஜிம்முக்குள் நுழைந்து ஊஞ்சல் ஆடி கொண்டிருக்கிறாள் என அவர் பதிவிட்டுள்ளார்.