டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான மின்னல் முரளி டீஸர் அப்டேட் !
By Sakthi Priyan | Galatta | August 25, 2020 17:55 PM IST

மலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு மின்னல் முரளி எனப்பெயரிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. மாநிலம் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் மிகப்பெரிய அடுத்த கட்ட வளர்ச்சியை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படம் மூலம் முன்னெடுத்துள்ளது. பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.
மின்னல் முரளி முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது. உயர்தரமிக்க நடிகர் குழுவான குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
மின்னல் முரளி மிகத் திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவை பெற்றுள்ளது. படத்தின் சவால மிகுந்த கலை இயக்கத்தை, மிக வித்தியாசமான செட்டுகளை வடுவமைக்கிறார் கலை இயக்குநர் மனு ஜகத். அனைத்து வகை இசையிலும் அசத்தும் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மனு மஞ்சித் பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் எழுத்து பணிகளை செய்துள்ளனர் அருண் அனிருதன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ. படத்தின் படத்தொகுப்பை லிவிங்ஸ்டன் மேத்யூ செய்துள்ளார்.
விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஆண்ட்ரு D கிரஸ் செய்கிறார். ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் செய்துள்ளார். ஹாசன் வண்டூர் மேக்கப் செய்ய, J மெல்வி உடை வடிவமைப்பு செய்துள்ளார். சூப்பர் ஹீரோவுக்கான தனித்த உடைவடிவமைப்பை தீபாலி நூர் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ போஸ்டரை டிசைன் செய்துள்ளார் N T ப்ரதூள். கருத்து வடிவமைப்பை பவி சங்கர் செய்துள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டீஸரை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.
A.R.Rahman announces his next project - unveils the motion poster!
25/08/2020 07:00 PM
Director Hari's important statement - requests Suriya to reconsider his decision
25/08/2020 06:00 PM
This veteran actor onboard for Mani Ratnam's Ponniyin Selvan - role revealed!
25/08/2020 05:14 PM