மலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.

Tovino Thomas Minnal Murali Church Set Destroyed

கொரோனா காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ளதால், நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக நடிகர் டோவினா தாமஸ் நடித்து வரும் மின்னல் முரளி படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்காக கேரளா மாநிலம் காலடி என்ற ஊரில் கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் மதிப்பில் செட் ஒன்று வடிமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

Tovino Thomas Minnal Murali Church Set Destroyed

இப்படியிருக்க திடீரென ஒரு கும்பல் புகுந்து, அந்த செட்டை அடித்து துவம்சம் செய்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர் சோபியா பால் மற்றும் கேரள சினிமா தொழிற்சங்க பொதுச் செயலாலரும், இயக்குனருமான பி.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

Tovino Thomas Minnal Murali Church Set Destroyed

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பதிவு செய்த டொவினோ தாமஸ், இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கவலை அளிக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.