திரையரங்குகள் ரசிகர்கள் திரைப்படங்களை பார்த்து ரசித்து மகிழும் ஒரு இடமாக மாறியுள்ளது.முன்னணி தொழில்நுட்பங்களுடன் பெரிய திரையில் தங்கள் நட்சத்திரங்களை கொண்டாட ரசிகர்கள் எப்போதும் தவறுவதில்லை.அப்படி இந்த வருடமும் பல பெரிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு மத்தியில் செம ஹிட் அடித்தது.

கடந்த 2 வருடங்களாக திரையரங்குகள் கொரோனவால் டல் அடித்தாலும் ஒரு சில படங்களை ரசிகர்கள் நிச்சயம் பெரிய திரையில் தான் கொண்டாடுவோம் என்று உறுதியாக இருந்து பார்த்து ரசித்துள்ளனர்.எப்போதும் போல வருட கடைசியில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் தங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் தளபதி விஜயின் மாஸ்டர் படம் முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்த இடத்தை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் பிடித்துள்ளது.இந்த இரண்டு படங்களுமே கொரோனா அலையை தொடர்ந்து முதல் படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களை தவிர சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த,தனுஷின் கர்ணன்,சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்கள் அனைத்து திரையரங்குகளின் லிஸ்ட்களில் இடம்பிடித்துள்ளது.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் RRR,வலிமை,ராதே ஷ்யாம் என சில பெரிய படங்கள் அணிவகுத்து நிற்க திரையரங்குகளுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திரையுலகினர் இருக்கின்றனர்.