கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலரும் தங்களது வீடுகளிலேயே இருக்கின்றனர்.இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதாக இல்லை.இதற்கான மருந்தினை கண்டுபிடிக்க பலரும் போராடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பலதரப்பட்ட மக்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் அதிகம் வீட்டிலேயே இருப்பதால் பலரும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் ஷூட்டிங் மற்றும் எந்த பொழுதுபோக்கும் இல்லாததால் மக்கள் டிவிகளையும் அதிகம் பார்த்து வருகின்றனர்.சீரியல்களின் ஷூட்டிங்கும் கடந்த மூன்று மாதங்களாக தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் பலரும் பல மொழி படங்களையும்,பாடல்களையும் பார்த்து ரசித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.அவர்கள் பார்த்த படங்கள் குறித்தும்,அவர்களுக்கு பிடித்த பாடல்கள் குறித்தும் பலரும் அவர்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டும் வந்தனர்.மேலும் சிலர் தங்கள் நடிப்பு,டான்ஸ் உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டி வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

யூடியூப் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்களில் ஒன்று,இதில் மக்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்கள்,வீடியோக்கள் என்று எதை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இந்த யூடியூப்பில் நம் தமிழ் சினிமாவை சேர்ந்த பல வீடியோக்களும் அதிகம் பார்க்கப்பட்ட விடீயோக்களாக வந்து சாதனை படைத்துள்ளன.இந்த லாக்டவுன் நேரத்தில் பல வீடியோக்களின் பார்வையாளர்களும் அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

தென்னிந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட பாடல்கள் குறித்த ஒரு லிஸ்டை யூடியூப்பில் இருக்கும் புள்ளிவிவரங்களை வைத்து தயார் செய்துள்ளோம்.அதன்படி யூடியூப்பில் அதிகம் ரசிகர்களிடம் இருந்து லைக்களை வாங்கிய டாப் 5 வீடியோக்கள் இதோ

1 ரௌடி பேபி - 3.6 மில்லியன் லைக்குகள்

2 Why This Kolaveri Di -  2.5 மில்லியன் லைக்குகள்

3 Butta Bomma - 2.4 மில்லியன் லைக்குகள்

4 பிகில் ட்ரைலர் - 2.3 மில்லியன் லைக்குகள்

5 குட்டி ஸ்டோரி - 1.7 மில்லியன் லைக்குகள்