சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு உலகமெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.  அதிலும் மார்வெல் ஸ்டுடியோஸ் சூப்பர் ஹீரோக்கள் மீது தனி மோகம் எப்போதும் உண்டு. அந்த வகையில் மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த பிரமாண்டத்தின் டிரைலர் வெளியானது.

முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது ஸ்பைடர்-மேன் நோ வே ஹோம் திரைப்படம் வெளிவர உள்ளது. இதன் முன்னோட்டமாக பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையிலான ட்ரெய்லர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதமாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தில் மற்றொரு மிகப்பெரிய சூப்பர் ஹீரோவான டாக்டர் ஸ்ட்ரேஞ் இடம் பெற்றிருப்பதோடு முன்னாள் ஸ்பைடர் மேன் சீரிஸில் வில்லனான டாக்டர் ஆக்டோபஸ்ஸும் டிரைலரில் இடம் பெற்றிருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.வருகிற டிசம்பர் 17ஆம் தேதி ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் திரையரங்குகளை அதிர வைக்க தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்வல்ஸ் ரசிகர்களின் செல்ல ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலனட் நடிக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்-ஆக பெனெடிக்ட் கம்பர்பேட்ச் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் சீமஸ் மெக்'கிரேவி ஒளிப்பதிவில் கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை இயக்குனர் ஜான் வாட்ஸ் இயக்கியுள்ளார். பிரமிப்பான அந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம் .