பசுமாட்டிடம் பாலியல் சில்மிஷம் செய்த கொடூரம்!
By Arul Valan Arasu | Galatta | September 03, 2019 15:31 PM IST
பசுவைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 வட மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பெருமாக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி, தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பாசு மாடு பலவீனம் அடைந்து வந்தை கவனித்துள்ளார். இதனால், நேற்றிரவு வீட்டுக்கு வெளியே மாட்டைக் கட்டி வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து, மாட்டை அவர் கண்காணித்து வந்துள்ளார்.
அப்போது நள்ளிரவு ஆனதும், பசுமாடு சப்தமிட்டு கத்தியுள்ளது. அப்போது, மாட்டின் உரிமையாளர் மறைந்திருந்து மாட்டைக் கவனித்தபோது, பசுமாட்டை அங்குக் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்து அவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு மாட்டைத் தேடியுள்ளார்.
இந்நிலையில், வடமாநில இளைஞர்கள் 3 பேர், பசு மாட்டைக் கடத்திச்சென்று அங்குள்ள கோழிப்பண்ணையில் மறைவாகக் கட்டி வைத்து, பாலியல் ரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, கிராம மக்கள் உதவியுடன், வடமாநில இளைஞர்கள் 3 பேரையும் அங்குள்ள மரத்தடியில் கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்துள்ளனர்.
விடிந்ததும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த பல்லடம் போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் 3 பேரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அருகில் உள்ள கல்குவாரியில் பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்கள் 3 பேரும் இதுபோன்று தொடர்ந்து பசுவிடம் பாலியல் சித்ரவதையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதனால், போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.