தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012-ல் வெளியான திரைப்படம் துப்பாக்கி.2012 தீபாவளிக்கு வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.

காஜல் அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.விதியுட் ஜமால் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.மனோபாலா,ஜெயராம்,சத்யன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்திருந்த சஞ்சனா சாரதி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.துப்பாக்கிக்கு முன்னதாக வழக்கு எண் 18/9 படத்தில் நடித்திருந்தாலும் துப்பாக்கி படம் அவருக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியது.இதனை தொடர்ந்து வாலு,என்றென்றும் புன்னகை,எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் சஞ்சனா.

சில ஆல்பம் பாடல்களிலும் நடித்திருந்தார் சஞ்சனா.கொரோனா நேரத்தில் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டும்,ரசிகர்களுடன் கலந்துரையாடியும் தனது நேரத்தை போக்கி வந்தார் சஞ்சனா.நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவரான சஞ்சனா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.அந்த வகையில் தற்போது தனது புதிய நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சஞ்சனா.சூர்யாவின் பூவெல்லாம் கெடுப்பார் படத்தில் இடம்பெற்ற சென்யோரிடா பாடலுக்கு இவர் நடனமாடும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்