பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் சுசி கணேசன்.திரைக்கதையில் வித்தியாசம் காட்டும் இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறத்தொடங்கின.தொடர்ந்து இவரது திரைப்படங்கள் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெற்று வந்தது.

ThiruttuPayale 2 Hindi Remake Vineet Kumar Singh

கடைசியாக இவர் திருட்டு பயலே 2 படத்தை இயக்கி இருந்தார்.பாபி சிம்ஹா,அமலா பால்,பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் 2017-ல் வெளிவந்த இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தை AGS என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

ThiruttuPayale 2 Hindi Remake Vineet Kumar Singh

இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது என்பதையும்,இந்த படத்தையும் சுசிகணேசனே இயக்குவார் என்பதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.தற்போது Mukkabaaz படத்தில் நடித்த வினீத் குமார் சிங் இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

Thiruttu Payale 2 Hindi Remake

இந்த படத்தை ரமேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.உத்தர பிரதேசத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 11ஆம் தேதி வாரணாசியில் தொடங்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Thiruttu Payale 2 Hindi Remake

Thiruttu Payale 2 Hindi Remake