சின்னத்திரையில் மெகாஹிட் அடித்த தொடர்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர்.இன்றும் பலரது பிரபலமான தொடராக இந்த தொடர் இருந்து வருகிறது.இந்த தொடரில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறினார்கள்.இந்த தொடரை திருமுருகன் இயக்கியிருந்தார்.

இந்த தொடருக்குகாக வெகுவாக பாராட்ட பட்ட இவர் சில படங்களை இயக்கும் வாய்ப்புகளையும் பெற்றார் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு மற்றும் எம் மகன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தார்.எம் மகன் படம் சூப்பர்ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் சில தொடர்களை சன் டிவியில் வழங்கினார் திருமுருகன்.தொடர்ந்து இவர் இயக்கி ஹீரோவாக நடித்த நாதஸ்வரம் மற்றும் கல்யாண வீடு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த கல்யாண வீடு தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.சில மாதங்களாக அமைதி காத்த திருமுருகன் தற்போது திருமுருகனின் திரு பிக்சர்ஸ் புதிய சீரியலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.இது குறித்து ஒரு வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.