பிரபல சீரியல் நடிகரின் மிரட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் ! ட்ரெண்டிங் புகைப்படம்
By Aravind Selvam | Galatta | July 24, 2021 15:24 PM IST
விஜய் டிவியில் கடந்த 2014-2017 வரை ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர் கல்யாணம் முதல் காதல் வரை.அமித் இந்த தொடரின் ஹீரோவாகவும்,ப்ரியா பவானி ஷங்கர் இந்த தொடரின் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் மூலம் அமித் மற்றும் ப்ரியா இருவரும் பிரபலங்களாக மாறினர்
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் கடந்த 2017-2019 வரை ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் அமித் ஹீரோவாக நடித்திருந்தார்.சரண்யா இந்த தொடரின் ஹீரோயினாக நடித்திருந்தார்.வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தவிர விஜய் டிவியின் மாப்பிள்ளை,சன் டிவியின் கண்மணி உள்ளிட்ட தொடர்களில் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார் அமித்.
தமிழ்,கன்னடம்,ஹிந்தி என்று பல மொழியின் முக்கிய படங்களான என்னை அறிந்தால்,2 ஸ்டேட்ஸ்,குற்றம் 23,மிருதன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் அமித்.மேலும் டப்பிங் கலைஞராகவும் சில படங்களிலும்,நிகழ்ச்சிகளும் இருந்துள்ளார்.மேலும் சில தொடர்களை தொகுத்து வழங்கியும் அசத்தியுள்ளார் அமித்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார் அமித்.தற்போது கடந்த ஒரு வருடத்தில் எப்படி மாற்றியுள்ளேன் என்பது குறித்த தனது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அமித்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்