கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இந்த சீரியலின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து தொடரின் ஹீரோ,ஹீரோயின் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பை அடுத்து தங்களது மனம் கவர்ந்த சந்தோஷ் மற்றும் ஜனனியை பார்க்கும் சந்தோஷத்தில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.