விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஆபீஸ்.இந்த தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து அசத்தினார் பவித்ரா.

தொடர்ந்து சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் பவித்ரா ஜனனி.இடையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடரில் ஹீரோயினாக நடித்தார் பவித்ரா.

இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது.இந்த தொடரின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் பவித்ரா.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ள தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்த வினோத் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த தொடரில் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.தற்போது இந்த தொடரில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மாற்றப்பட்டு பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

thendral vanthu ennai thodum actress replaced vinoth pavithra janani