பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம்.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.

UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது அமைந்துள்ளது.கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.சத்யராஜ்,ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கு Dear Comrade,மான்ஸ்டர்,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.இந்த படம் மார்ச் 11ஆம் தேதி நேற்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.இந்த படத்தில் தமன் இசையமைத்த படத்தில் வரும் ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்