கடின உழைப்பிற்கு முன்மாதிரியாகவும், தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தவர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஐண்ட் சரவணன் அவர்கள். தன் விளம்பர படங்களில் தானே நடித்து வழக்கமாக விளம்பரப் படங்களில் திரை நட்சத்திரங்களும் மாடல்களும் நடித்துவந்த ட்ரெண்டை மாற்றி புதிய ட்ரெண்டை உருவாக்கியவர் லெஐண்ட் சரவணன்.

இவரைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களின் விளம்பர படங்களில் அதன் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்களில் நடித்துவந்த லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜண்ட்.

பிரபல இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில், தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ரிலீஸ் உரிமையை முன்னணி தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்களின் கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் திரையிடப்பட தி லெஜண்ட் படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TheLegendMovie starring #TheLegendSaravanan is associated with @Gopuram_Cinemas #GNAnbuchezhian for TamilNadu Theatrical Release

Worldwide release on July 28th#TheLegendSaravanaStoresProduction #TheLegend #TheLegendFromJuly28@jdjeryofficial @Jharrisjayaraj pic.twitter.com/4vE6XRZOxI

— The Legend (@_TheLegendMovie) July 6, 2022