அசைக்கமுடியாத தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்பிற்கும் அடையாளமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். முன்னதாக உல்லாசம் & விசில் ஆகிய படங்களை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ளனர்.

தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள தி லெஜண்ட் படம் கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்கள் வெளியிட பிரம்மாண்டமாக கிட்டதட்ட 2500 திரையரங்குகளில் இன்று ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தி லெஜண்ட் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல முன்னணி திரையரங்குகளில் இத்திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தி லெஜண்ட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக பதிவிட்டுள்ளனர். அந்த பதிவுகள் இதோ…
 

#TheLegend takes a good opening being Thursday release & the occupancy is comparable to any decent star of Tamil Cinema 👌🏽👌🏽👌🏽

Crazy atmosphere here in #Vettri during the interval - audience celebrating with #LegendSaravanan standee …@yoursthelegend pic.twitter.com/IrHkS2VNMV

— Rakesh Gowthaman (@VettriTheatres) July 28, 2022

#TheLegend FDFS booking in full swing . The @RohiniSilverScr main screen expected to go houseful organically despite late opening of bookings! Good start !!

— Nikilesh Surya 🇮🇳 (@NikileshSurya) July 27, 2022