தமிழகத்தின் முன்னணி நிறுவனமாக திகழும் தனது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த தி லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்துள்ளார்.

முன்னதாக உல்லாசம் & விசில் ஆகிய படங்களை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்கள் வெளியிட தி லெஜண்ட் படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

கிட்டதட்ட 2500 திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்திற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளுக்கான சென்சார் அறிக்கை தற்போது வெளியானது. தி லெஜண்ட் படத்திற்கு அனைத்து மொழிகளிலும் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

All Languages Certified with U/A!#TheLegend #DrSTheLegend Movie is all set for a grand release tomorrow!#LegendSaravanan @_TheLegendMovie #TheLegendFromTomorrow #WorldwideRelease28July @jdjeryofficial @Jharrisjayaraj @VelrajR pic.twitter.com/cbxOZ9WWfY

— Legend Saravanan (@yoursthelegend) July 27, 2022