சினிமா மக்களை மகிழ்விக்கும் கலைகளில் முக்கியமான ஒன்று.இந்த சினிமாவில் பல கனவுகளோடு வந்து பலரும் மக்கள் கவர்ந்து நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.அப்படி போராடி வெற்றி பெரும் பலருக்கும் பல அங்கீகாரங்களை ரசிகர்களும் , பத்திரிகை துறையினரும் கொடுத்து கௌரவப்படுத்தி வருகிறோம்.

மக்களுக்கு தரமான நம்பத்தக்க செய்திகளை வழங்கி வருவதில் முக்கிய பங்காற்றுவது நம் கலாட்டா.அப்படி சினிமாவில் போராடி வெற்றி பெரும் பலரையும் பாராட்ட கலாட்டா தவறியதில்லை.அவ்வப்போது சில விருது நிகழ்ச்சிகள் , சிறப்பு பட்டங்கள் என்று வழங்கி பல கலைஞர்களை ஊக்குவித்து வருகிறோம்.

அப்படி இந்த வருடம் பிரம்மாண்டமாய் சினிமாவில் இருக்கும் உச்சநட்சத்திரங்கள் முதல் சமீபத்தில் அறிமுகமாகி கலக்கி வரும் கலைஞர்கள் வரை அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக Galatta Crown 2022 விருதுகள் வரும் மே 8ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.கடந்த வருடம் வெளியான பல முக்கிய படங்கள் அதில் கலக்கிய நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னட,மலையாள,ஹிந்தி என பல மாநிலங்களில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.இதற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மிகப்பிரம்மாண்டமாக நடக்கும் இந்த நிகழ்வினை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் டிக்கெட்டுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் புக் செய்து நேரில் கண்டுகளிக்கலாம்.

Book Tickets For The Galatta Crown 2022 Award Show Here