பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் தர்ஷன். அதற்கு முன் மாடலிங் செய்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற பெருமை தர்ஷனை சேரும். இவர் பிரபல நடிகை மற்றும் மாடலிங்கான சனம் ஷெட்டியை காதலித்து தற்போது கல்யாணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக சனம் ஷெட்டி கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து தர்‌ஷன் பத்திரிகையாளர்களுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். 

sanamshetty

ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதன்பிறகு இருவருக்குள் சண்டை பெரிதானது. கடனாக தந்த பணத்தை கூட பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியவுடன் திருப்பி தந்ததாகவும் தர்ஷன் கூறியிருந்தார். 

tharshan

தற்போது இருவரும் பேசும் ஆடியோ பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உண்மை நிலவரம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது சனம் ஷெட்டி, STR நடிக்கும் மஹா படத்தில் நடித்து வருகிறார். இவர் கைவசம் வால்டர் திரைப்படம் உள்ளது.