பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் தர்ஷன். அதற்கு முன் மாடலிங் செய்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற பெருமை தர்ஷனை சேரும். இவர் பிரபல நடிகை மற்றும் மாடலிங்கான சனம் ஷெட்டியை காதலித்து தற்போது கல்யாணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக நேற்று சனம் ஷெட்டி கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இன்று தர்‌ஷன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்

Tharshan

நானும் சனம் ஷெட்டியும் காதலித்தது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முயற்சி செய்தது அவர்தான். ஒரு விளம்பரத்தை பார்த்து விஜய் டிவியில் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். அவர்கள் அழைத்த அன்று தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. என் வீட்டுக்கு தெரியாமல் தான் நிச்சய தார்த்தம் நடந்தது. படவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று இந்த வி‌ஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

tharshan

பிக்பாஸ் செல்லும் போது எனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகித்துக் கொள்கிறேன் என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பின் என் தங்கையிடம் பேசி என் சமூகவலைத்தள கணக்கு பாஸ்வேர்டுகளை வாங்கிக் கொண்டார். அதில் அவரிட்ட சில பதிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகள் மூலமாகத்தான் எங்கள் காதல் வெளியில் தெரிய வந்தது. பிற பெண்களுடன் பேசக்கூடாது என்று பிரச்சினை செய்தார். முக்கியமாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்னுடன் போட்டியாளர்களாக இருந்த பெண்களுடன் நான் பேசக்கூடாது என்று சந்தேகப்பட்டார்.அவர் சிங்கப்பூரில் வந்து தங்கியது சேர்ந்து பார்ட்டிக்கு சென்றது எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவருடன் வாழமுடியாது என்று தெரிந்ததால் பிரிந்து விடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் மீடியா முன்பு அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

tharshan

ஆனால் ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதன்பிறகு தான் எங்களுக்குள் சண்டை பெரிதானது. ரூ. 15 லட்சம் எனக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய். அவர் எனக்கு 3.5 லட்சம் பணம் கடனாக தந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

நான் அவர் மீது எந்த வழக்கும் போட மாட்டேன். ஆனால் என் மீது தவறில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். அவரை எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எனவே அவரை அசிங்கபடுத்த விரும்பவில்லை. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். ஒரு பெண்ணை எந்த சூழ்நிலையிலும் அசிங்கபடுத்த மாட்டேன் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது எடுத்துரைத்தார்.