விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றிபெற்றவர் தர்ஷன். இலங்கை தமிழரான தர்ஷன் பிக் பாஸ் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் கூகுள் குட்டப்பா.

மலையாள திரையுலகலகில் சூப்பர்ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள கூகுள் திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள கூகுள் கிட்டப்பா திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் ஆர்கே செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் பாடல் குறித்த ருசிகர இன்று வெளியானது. ஜிப்ரான் இசையில் மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் எமோஷனலான பாடலாக வெளிவர இருக்கும் “யாரோ யாரோ” பாடலை பிரபல பாடகர் பிரதீப் குமார் பாடியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.