மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர். இயக்குனர் ப்ரியதர்ஷன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சலி மரைக்காயர் வாழ்க்கையை தழுவி உருவாகவுள்ளது இப்படம். குஞ்சலி மரைக்காயர் என்கிற முகம்மது போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்டவர். 

mohanlal

இத்திரைப்படத்தில் பிரணவ் லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார்.

thanu maraikayar kalaippulisthanu

இந்நிலையில் மரைக்காயர் படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி S. தாணு வெளியிடுகிறார். இதுகுறித்து தாணு ட்விட்டரில், சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான நம் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். அசுரன் வெற்றியை தொடர்ந்து, தாணு தற்போது சூர்யா-வெற்றிமாறன் படத்தை தயாரிக்கவுள்ளார்.