திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட ஹீரோயின்களில் ஒருவர் ஜோதிகா. 1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நக்மாவின் தங்கை ஆவார் ஜோதிகா. பிரியதர்ஷன் இயக்கத்தில் 1998-ல் வெளியான டோலி சஜா கே ரக்னா என்னும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். 

தமிழில் முதல்முறையாக 1999-ல் அஜித்-சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் கதையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்திருந்தது. அதே ஆண்டு வசந்த் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகாவின் துருதுருப்பான தோற்றமும் நடிப்பும் கவனம் ஈர்த்தன. 

க்யூட்டான பாவனைகள். துருதுருப்பான இயல்பு ஆகியவை ஜோதிகாவின் தனிச் சிறப்புகளாக அமைந்தன. அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அழுத்தமான கதாநாயகி வேடம்தான் அமைந்திருக்கிறது. பல வகையான அந்தக் கதாபாத்திரங்களில் தனது முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே திரையிலிருந்து விலகி குடும்பத்தைத் தொடங்கி இப்போது மீண்டும் நடிக்க வந்திருப்பவர் வயதுக்கேற்ற முதிர்ச்சியான கண்ணியமான கதாபாத்திரங்களில் மாறிவரும் ரசனைக்கேற்ற கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

பேரழகன், சந்திரமுகி, மொழி ஆகிய படங்களில் நடித்ததற்காக மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருக்கும் ஜோதிகா தேசிய விருது உள்ளிட்ட தேசிய விருது உள்ளிட்ட தேசிய அளவிலான அங்கீகாரங்களையும் பெறுவதற்கான காலம் கனிந்திருக்கிறது என்றே சொல்லலாம். 

சில மாதங்களுக்கு முன், நடிகை ஜோதிகா கோவிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு மோசமான இருக்கிறது. மருத்துவமனையில் நான் பார்த்தது வாயால் சொல்ல முடியாது. கோயில் உண்டியலில் காசு போடுறீர்கள், பெயிண்ட் அடிக்கிறீர்கள், உதவி செய்கிறீர்கள், அதே மாதிரி அரசு மருத்துவமனைகளுக்கும் அரசுப் பள்ளிக்கும் உதவி செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 

இது மிகக்பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், நடிகை ஜோதிகா அவர் குறிப்பிட்ட தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அந்த நிதியில், மருத்துவமனை மிகவும் அழகாக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோதிக அந்த மருத்துவமனைக்கு செல்ல காரணமாக இருந்த படத்தின் இயக்குனர் இரா.சரவணன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஜோ ஹீரோ தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

ஜோதிகா நடிப்பில் கடைசியாக பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியானது. ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் உருவான இப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி அசத்தியது. இந்த லாக்டவுனில் ஓடிடி-ல் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது இப்படம்.