சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக அசத்தி வருபவர் நவீன் வெற்றி.விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலி சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நவீன்.இந்த தொடரின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார் நவீன் வெற்றி.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஹிட் அடித்த தேன்மொழி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாறினார் நவீன் வெற்றி.இவற்றை தவிர நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து அசத்தி வருகிறார் நவீன்.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.இவர் 2020 அக்டோபரில் தனது காதல் மனைவி சௌம்யாவை கரம்பிடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.தனது மனைவி சௌமியா கர்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் நவீன்.தற்போது தங்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

thamizhum saraswathiyum serial actor navin vetri blessed with a baby girl