தம்பி படத்தின் தாலாட்டு நாள் பாடல் வீடியோ வெளியானது !
By Sakthi Priyan | Galatta | March 18, 2020 11:35 AM IST

இயக்குனர் ஜீத்து ஜோஸஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்த படம் தம்பி. பாபநாசம் வெற்றிக்கு பிறகு குடும்பத்தை அடித்தளமாய் கொண்டு களமிறங்கியிருந்தார் இயக்குனர்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரியும் கார்த்தி, பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் குடும்பத்துடன் இணைகிறார். பொறுப்புள்ள அக்கா ஜோதிகாவின் தம்பியாக நுழையும் கார்த்தி அங்கு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் ? நிஜத்திலே அவர் தான் தம்பியா அல்லது அந்நியரா ? என்பது தான் இந்த படத்தின் கதைக்கரு. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியானது. தற்போது படத்திலிருந்து தாலாட்டு நாள் பாடல் வீடியோ வெளியானது. கிருஷ்ணா பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.
Official: Ko and Anjaathey fame Ajmal Ameer to act in Nayanthara's Netrikann!
18/03/2020 11:56 AM
Nayanthara's Netrikann director Milind Rau celebrates birthday on sets!
17/03/2020 08:03 PM
Harish Kalyan's Dharala Prabhu - Pularum Video Song | Tanya Hope
17/03/2020 07:05 PM